அம்பி (நகரம்)
இந்தியாவிலுள்ள ஒரு நகரம்அம்பி அல்லது விஜயநகரம் என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் விஜயநகர மாவட்டத்திலுள்ள ஒரு நகரம் ஆகும். மாநிலத்தின் கிழக்கு மற்றும் மத்திய பகுதியில் துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்துள்ள அம்பி ஹொசப்பேட்டை நகருக்கு அருகில் உள்ளது. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் உலக பாரம்பரியக் களமான அம்பி குழுமத்தின் நினைவுச்சின்னங்களுக்காக இது பிரபலமானது.
Read article